India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்றுள்ளார். தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை, ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கி, கட்டாயம் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
சென்னையில் கடந்த ஒரு வரமாக, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்போன் பறிப்பு மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 6 சிறுவர்களும் உள்ளனர். அவர்களிடமிருந்து 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72,71,521 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்றும், நாளையும் (ஜூன் 20, 21) இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடப்பு ஜூன் மாதத்தில் மாட்டும் இதுவரை 173.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 339% அதிகம் ஆகும் (சராசரி- 39.6 மிமீ). வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தும் வருகிறது.
சென்னையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தொடங்கிய மழை, மெல்ல மெல்ல அதிகரித்து இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. அண்ணாநகர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, வடபழனி, வள்ளுவர் கோட்டம், கிண்டி, வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர்.
சென்னையில் வேலைவாய்ப்பு (ம) தொழில் வழிகாட்டும் மையங்கள் சார்பில் கிண்டியில் வரும் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Way2News செய்தி அப்ளிகேஷனை சந்தைப்படுத்த மேலாளர்கள் தேவை. சென்னையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவமிக்கவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பயனாளர்களை Way2News பயன்படுத்த வைக்கும் திறமையாளர்களுக்கு முன்னுரிமை உண்டு. எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்பினால், உங்கள் Resumeஐ balaswamy@way2news.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
‘லூலூ மால்’ நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பிரிவான ‘லூலூ ஹைபர் மார்கெட்’, சென்னையில் தொடங்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்ட்ரல், ஷெனாய் நகர், விம்கோ நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலூ ஹைபர் மார்க்கெட் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, மெட்ரோவின் ஒப்பந்த நிறுவனமான ‘கிரேஸ் சர்வீஸ்’ தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.
சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே. நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, 2ஆவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 12 விமானங்கள் தரையிறங்குவதிலும் 14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நேற்று இரவு 10.30 மணி வரை திருவொற்றியூரில் 85 மி.மீ., அமைந்தகரை- 65 மி.மீ., தேனாம்பேட்டை- 62 மி.மீ., மணலி 60 மி.மீ., கொளத்தூர்- 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று இரவு 9 மணியளவில் இருந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, நந்தனம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு, தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்ல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.