India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, புதிய பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி மேயர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இன்று தொடங்கிய மாமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், அண்மையில் மாடுகள் மூலம் விபத்துகள் நடப்பது அதிகரித்து வருவதாகவும், இதனால் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு 5 பேர்கள் வீதம் பணியாளர்களை நியமித்து மாடுகளை பிடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 183 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க மேயர் பிரியா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மாநகராட்சி மாமன்ற கூட்டம், துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று தொடங்கியது. இதில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களை நியமிக்கப்படவுள்ளது என்றும், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.18,000 வரை சம்பளம் வழங்கவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆலையின் உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று வரை 12 பேர் கைதான நிலையில், இன்று காலை மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது உரிமையாளர்கள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் அண்ணா நகா், பாடி, அம்பத்தூா், கோயம்பேடு, அயனாவரம், பெரம்பூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னையில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்வதால், குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், இதுவரை 11 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் மாடுகள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக சென்னையில் மாடுகளை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஷெனாய் நகர், விம்கோ நகர், சென்னை சென்ட்ரல் ஆகிய மூன்று சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. சுமார் 1 லட்சம் சதுர அடியில் இந்த ஹைப்பர் மார்ககெட் வர இருக்கிறது. ஜூலை முதல் வாரத்தில் ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஹைப்பர் மார்ககெட்டுகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
உடல்நலம் சரியில்லாமல் இறந்த ஓட்டேரியை சேர்ந்த ஜோதிலட்சுமியை அடக்கம் செய்ய நேற்று அவரது கணவர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் ஓட்டேரி சுடுகாட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு யாரோ பன்றி மற்றும் கோழியை அறுத்து மாந்திரீகம் செய்து இருப்பது தெரிய வந்தது. இதே குறித்த புகாரின் பேரில் தலைமை செயலக காலணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூன் 22) தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிப்பதாக தெரிவித்த அமைச்சர், வார்டுகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகளின் எணிணிக்கையை அதிகரிப்பது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து, போராட்டங்களை மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.