India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை(12.6.2024) மின்பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அடையாறு, சோழிங்கநல்லூர், வியாசர்பாடி, தி.நகர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும், பிற்பகல் 2 மணிக்குள் பணி முடிவடைந்தால் மின்விநியோகம் வழங்கப்படும் என்றனர்.
சென்னை: ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு, ஊக்கத் தொகையாக ரூ.75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை நேற்று(ஜூன் 10) தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி மே.27 – ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த மே.27 முதல் ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பின், விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களில் காற்று பலமாக வீசி வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வானவில் தோன்றியது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் பார்த்து ரசித்தவாறு செல்கின்றனர். சிலர் அதனை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “காலம் உள்ள வரை கலைஞர்” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இப்புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் கீழ்காணும் பகுதிகளில் நாளை (ஜூன் 11) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, வேளச்சேரி, எழில் நகர், திருவொற்றியூர், ஐஐடி, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, நீலகிரி எம்பி ஆ.ராசா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்படும் முன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கழித்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது ஒரு சாதனை. இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதற்காக நான் டெல்லி செல்லவுள்ளேன்” என்றார்.
Sorry, no posts matched your criteria.