Chennai

News June 14, 2024

புத்தம் புதிதாய் மாறும் ‘அம்மா உணவகம்’

image

அம்மா உணவகங்களை புது பொலிவாக்கி, ருசியான உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த, ரூ.5 கோடி செலவில் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் பழுதான சமையலறைகள், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட உள்ளன. மேலும், வர்ணம் அடிக்கப்பட்டு சீரமைப்பு பணிகளை தொடங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

News June 14, 2024

சென்னையில் 2 நாள்களுக்கு மழை பெய்யும்

image

சென்னையில் இன்று மற்றும் நாளை (ஜூன் 14,15) இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது சென்னைவாசிகளுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. அதிகபட்சமாக மணலி, திரு.வி.க.நகா் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News June 14, 2024

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது.

image

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் தொடங்கியது. 61 நாட்களுக்குப் பிறகு இன்று இரவு 12 மணியுடன் (ஜூன் 14) முடிகிறது. 2 மாதங்களாக சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால் மீன்களின் விலை குறையும் என தெரிகிறது.

News June 14, 2024

உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற காங்., எம்.பி.க்கள்

image

I.N.D.I.A கூட்டணி சார்பில் திருவள்ளூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் சசிகாந்த், விஜய் வசந்த், சுதா ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர. இந்நிலையில், நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News June 14, 2024

மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்

image

வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று மேயர் பிரியா தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா. கணபதி மாநகராட்சி ஆணையர் உடன இருந்தனர்.

News June 14, 2024

சென்னையில் பிளாஸ்டிக் கண்காட்சி

image

சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கண்காட்சி இன்று முதல் ஜூன் 17 வரை நடைபெற உள்ளது. 6ஆவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சியில், பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பதற்கான இயந்திரங்கள், அச்சுகள், வார்ப்புகள், துணைப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்வையிடுவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

News June 13, 2024

இப்பகுதியில் நாளை மின்தடை 

image

சென்னையில் நாளை(14.6.24) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், பல்லாவரம், அடையார், எழில் நகர், தண்டையார்பேட்டை, மாதவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று தனது அதிகாரப்பூா்வ “X” தளத்தில் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

மீன்பிடி தடைக்காலம் முடிகிறது

image

கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாட்களுக்குப் பிறகு நாளையுடன் (ஜூன்-14) முடிகிறது. 2 மாதங்களாக சென்னை, காசிமேடு கடலூர், உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்கின்றனர்.

News June 13, 2024

சென்னையில் பலத்த மழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று மாலை(6 மணி அளவில்) பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

சென்னை: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!