India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கோயம்பேடு பூ சந்தையில் ஆடி மாதத்தை முன்னிட்டு, கடந்த 3 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரோஜா பூ ரூ.140, மல்லி ரூ.750, சாமந்தி பூ ரூ.250, சம்பங்கி பூ ரூ.200, கனகாம்பரம் ரூ.1800, முல்லை ரூ.500, அரளி பூ ரூ.280, பன்னீர் ரோஜா ரூ.120 சாக்லேட் ரோஜா ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூக்களின் விலை 10 முதல் 15 வரை குறைந்துள்ளது.
டெல்லி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர், “செத்தாலும் இனி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசமாட்டேன். அதனால், யாரும் பேட்டி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். கடந்த ஜூன் மாதம் அவர் இனிமேல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னைக்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாரஇறுதி விடுமுறை, அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளம்பாக்கத்தில் இருந்து 2ஆம் தேதி 295 பேருந்துகள், 3ஆம் தேதி 325 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து, 2, 3 ஆகிய தேதிகளில் தலா 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆக.4ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் நாளை (ஆகஸ்ட் 2) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கொரட்டூர், கோபாலபுரம், ராயப்பேட்டை, புதுப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, தியாகராயா நகர், வ.ஊ.சி. நகர், சிவன் நகர், மீன் பி.டி.துறைமுகம், தனபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சென்னை மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல் மாவட்டங்கள் வாரியாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காவல் துறையில் பணி புரிந்த 1 கண்காணிப்பாளர், 14 காவல் உதவி ஆய்வாளர், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 26 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அவர்களை சென்னை காவல் ஆணையாளர் அருண் சால்வை, மாலை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். http://tnstc.in, மொபைல் செயலி வழியே முன்பதிவு செய்யலாம்.
சென்னை கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.