India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் கட்டணம் இன்றி செல்வதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி பயணம் செய்ய வருகின்ற 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 42 பணிமனைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. இதை வாங்க ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் (ம) 2 புகைப்படங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை, திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூரில் நேற்று பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கி 50 மீட்டர் இழுத்துச் சென்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூர் கால்நடை பராமரிப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று(ஜூன் 17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக , உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக , உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக தியாகத்திருநாள் சிறக்கட்டும் ” என ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று(ஜூன் 16) நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இன்று(ஜூன் 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 – 11 மணி வரை & மாலை 5 – 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 – 8 & காலை 11 – மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 – 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.
போரூர் அருகே சேக்மானியம் பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் பிரியா (35). நேற்று இவரது வீட்டின் உரிமையாளரான ஆதம்பாக்கம், பாரத் நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் (44) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து இவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர் சத்தம் போடவே அங்கிருந்து சங்கர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரில் போலீசார் சங்கரை இன்று கைது செய்தனர்.
முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவு காரணமாக சென்னையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 700 – ரூ.800 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரு கிலோ ரூ.1,200 ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.500க்கும், ஜாதி மல்லி ரூ.600க்கும் விற்பனையாகிறது.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் அடைத்து திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கின்றனர். மேலும், திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாங்கள் விக்bகிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்
சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி செய்தி நிறுவனம் தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் வானொலி அறிவிப்பு வெளியாகத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில், சென்னை வானொலி நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் 9 மொழிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டு நாய்களை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துகளை ஒன்றிய அரசு கோரியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் “நாய்களின் உளவியல் குறித்தும் அவற்றின் நடத்தை குறித்தும் ஆய்வு செய்த பிறகே அவை ஆக்ரோஷமானவையா , இல்லையா என முடிவெடுக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.