India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே இன்று (ஆகஸ்ட் 2) மோதல் ஏற்பட்டது. தாம்பரம்- கடற்கரை மின்சார ரயில் சைதாப்பேட்டைக்கு வந்தபோது மாணவர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டனர். அப்போது மாணவர்கள் ரயில் மீது கல்லை எறிந்ததில் மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து 2 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை விமான நிலையப் பகுதியில் 60 நாட்களுக்கு கிளைடர், ட்ரோன், ஏர் பலூன்கள் பறக்க விடத் தடை விதித்து பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில், 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவின்கீழ் சென்னை விமான நிலைய வான் பகுதியில் ஆக. 1 முதல் செப். 29 வரை லேசர் பீம் லைட் அடிப்பது, இலகுரக சாதனங்களை பறக்க விடத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
படூர் புதிய பைபாஸ் சாலையில், நேற்றிரவு அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்திற்குள்ளானது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த சிவா, அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் இருவரும், மருத்துவமனையில் தீவிர சிகிசிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கர்லின் பால் நள்ளிரவில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் விஷால் – லைகா நிறுவனம் இடையேயான வழக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி முடிவுக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகளின் கேள்விக்கு ‘பாஸ்’ என்று அழைத்து பதில் கொடுக்க முற்பட்டுள்ளார் விஷால். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாஸ் என்றெல்லாம் அழைக்ககூடாது. கேட்கப்படும் கேள்விக்கு ஆம், இல்லை என கூறினால் போதும்” என்று அறிவுரை கூறியுள்ளனர். இது தற்போது தெரியவந்துள்ளது.
செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா (49) மாரடைப்பால் நேற்று (ஆகஸ்ட் 1) உயிரிழந்தார். அயனாவரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதில், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன், மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட 220 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு, B.Com, B.Sc, D.Pharm, Diploma, DMLT, M.Com, M.Sc, MBBS, MD, Nursing, PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் <
நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் நாளை (ஆகஸ்ட் 3) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நந்தம்பாக்கம், கொளப்பாக்கம், காலடிப்பேட்டை, முகலிவாக்கம், அடையாறு, ராமாபுரம், பெசன்ட் நகர், மடிப்பாக்கம், ராமாபுரம், காலடிபேட்டை, சாத்தாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்களகரமான நாட்களில் பத்திர பதிவுகளை செய்த எல்லோரும் விரும்புகிறார்கள் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை விடுமுறை நாட்களிலும் ஆவண பதிவுக்கு அலுவலகங்களை திறந்து வைத்துள்ளது அதன்படி ஒரு 3-ம் தேதி ஆடிப்பெருக்கு நாளில் சென்னையில் பத்திரப்பதிவு செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.