Chennai

News April 23, 2025

அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்

image

புளியந்தோப்பைச் சேர்ந்த பாலு, குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) குடித்துவிட்டு ரகளை செய்ததோடு, மனைவி வள்ளி மற்றும் மருமகள் அஞ்சலையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தையை ஹெல்மட்டால் அடித்து, பிறகு கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆனால், தந்தையே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

News April 23, 2025

விமான நிலையத்தில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்னை விமான நிலையத்தில், ஏ.டி.சி. எனப்படும் விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கு, காலியாக உள்ள ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதிதான் கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (22.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*.

News April 22, 2025

கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை – தெற்கு ரயில்வே

image

சென்னையில் கடந்த 19ஆம் தேதி புறநகர் ஏசி ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்.22) இந்த ரயில் சேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கவும், கட்டணத்தை குறைக்கவும் பயணிகள் வலியுறுத்தினர். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம், ‘புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளது.

News April 22, 2025

சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

image

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை
▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்
▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்
▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்
▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்
▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்
உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.

News April 22, 2025

புறநகர் AC ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை

image

சென்னை புறநகர் ஏ.சி. மின்சார ரயில் சேவைக்கு ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறினாலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அதற்கு மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. பயணிகள் கருத்துக்களை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம். மேலும், முக்கிய நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 22, 2025

ராயபுரத்தில் ரயில் தடம் புரண்டது

image

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

சென்னையில் திடிரென மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். ஒருவேளை அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.

News April 22, 2025

புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

image

சென்னையில், நேற்று (ஏப்ரல் 21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளதாகவும், பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!