India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவை, சுமார் ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடந்த திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு-2024 அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும், 9 நவீன வாகனங்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த கோகிலா (39), அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளரும், பிரபல ரவுடி ஜான் கென்னடி மனைவி ஆவார். இவரிடம், கடந்த 27ஆம் தேதி வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதுடன், அவரது சங்கை அறுக்காமல் விடக்கூடாது என புதுப்பேட்டையை சேர்ந்த அதிமுக மகளிர் அணி 63ஆவது வட்ட செயலாளர் வாணி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வாணியை கைது செய்தனர்.
பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆக.3) முதல் 14ஆம் தேதி வரை சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கூடுதலாக, தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50, மாலை 6.26, இரவு 7.15க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூ சந்தையில் நேற்றைவிட பூக்களின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. ரோஜா பூ ரூ.150, செண்டுமல்லி ரூ.80, சாமந்தி பூ ரூ.200, சம்பங்கி பூ ரூ.140, கனகாம்பரம் ரூ.800, மல்லி ரூ.400, அரளி பூ ரூ.50க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. நேற்றைவிட ஒவ்வொரு பூக்களின் விலையும் சுமார் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நாளை ஆடி பெருக்கு என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் காவிரிகரையோரம் செல்வர். அதற்கு ஏற்றவாரு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கரையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
2040ஆம் ஆண்டில் கடல் மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 7 % நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கும் என சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடல் மட்டம் உயரக்கூடும். அடையாறு சுற்றுச்சுழல் பூங்கா, தீவுத் திடல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உடன் இன்று, ஆஸ்திரேலியா துணைத் தூதர் சிலை சகி மரியாதை நிமித்தமாக ரிப்பன் கட்டட அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாளை (ஆகஸ்ட் 3) முதல் 14ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் 13.30 மணி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர், பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு திருப்புகழ் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது சென்னைக்கு அதீத மழை பொழிவு இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் அந்த குழு ஆலோசனை செய்ததன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ஆட்சி செலுத்துவார்கள் எனவும், 34% புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் சேர்க்கை உயர்கல்வியில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.