Chennai

News July 7, 2024

சென்னை வந்தடைந்தார் மாயாவதி

image

பி.எஸ்.பி. கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்துள்ளார். தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், பெரம்பூர் பகுதிக்கு காரில் செல்ல உள்ளார். இதற்காக, பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேசமயம், அடக்கம் பண்ணுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News July 7, 2024

மாயாவதி வருகை; சென்னையில் பலத்த பாதுகாப்பு

image

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பி.எஸ்.பி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ளார். பகல் 1 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.

News July 7, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை (ஜூலை 8) பல்வேறு இடங்களில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்பத்தூர், எழும்பூர், போரூர், திருமுடிவாக்கம், வியாசர்பாடி, கிண்டி, கே.கே நகர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்றும், பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2024

பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல்

image

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் நேற்று முன்தினம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்று ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவருக்கு புத்த மதத்தின்படி இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

News July 7, 2024

“கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது”

image

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னையில் கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களை காட்டிலும் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2023 ஜூன் 30 வரை 63 கொலைகள் நடந்திருந்தது. ஆனால், 2024 ஜூன் 30 வரை 58 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. சென்னையில் ஓராண்டில் 666 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

News July 6, 2024

சென்னையில் வேலை வாய்ப்பு

image

மதுரவாயல் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 ஆதிதிராவிடர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வரும் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

மிகப்பெரிய பேரிழப்பாகும் – உதயநிதி

image

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தளத்தில், “அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும் என பதிவிட்டுள்ளார்.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி நடந்தது?

image

ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி, கொலையாளிகள் முதலில் பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் வெட்டினர். கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின், இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை வீர்ர் என்பதால் வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்தது அம்பலமாகியுள்ளது.

News July 6, 2024

நாளை அஞ்சலி செலுத்த வரும் மாயாவதி

image

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல், பெரம்பூர் பந்தர் தோட்ட தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட உள்ளது. இதனையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் உடற்கூறாய்வு நிறைவு

image

பி.எஸ்.பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூறாய்வு நிறைவடைந்து விட்டதாக ராஜிவ் காந்தி மருத்துவமனை தலைவர் தோணிராஜன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள இருபுற சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது இடம் வேண்டுமென ஆதரவலார்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!