India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற செவி மாற்றுத்திறனாளிகளுக்கான T20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரையும் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024ல் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை https://sdat.tn.gov.in சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகள் 27 வகையான விளையாட்டுகள் இதில் நடைபெற உள்ளன.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.
ரேஸ் பைக் மோதி போலீசார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போருர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குமரன், இன்று (ஆகஸ்ட் 4) தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த விலையுயர்ந்த பைக் குமரன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் உதயநிதி இளைய சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது தான் பள்ளிக்கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்றார்.
எழும்பூரில் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, முதல்வர் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி எனப் பிரித்து பார்ப்பது கிடையாது. அரசுப்பள்ளி மட்டும் இல்லாமல் தனியார் பள்ளி முன்னேற்றத்துக்கும் அரசு துணை நிற்கும் என்றார். மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்ற உதயநிதி, விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் மாசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது பேட்டி அளித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கட்டடத்திற்கு, ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி, சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஐபிஎஸ் அதிகாரி நஜ்முல் ஹூடா, சென்னை நவீனமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்ட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக சரோஜ் குமார் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (ஆகஸ்ட் 4) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.