India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், சைதாப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், அண்ணா சாலை, போரூர் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாவதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பேசிய அமைச்சர் உதயநிதி, லயோலா நிர்வாகம் கல்லூரியில் நடக்கும் தேர்தலில் தான் நிற்க கூடாது என தன்னிடம் உறுதிப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், தான் இப்போது, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இங்கு வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
அனுமதியே பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விலை ரூ.1,699 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Paytm செயலில் பார்முலா 4 பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒருநாள் டிக்கெட் விலை ரூ.1,699 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில், பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி இந்த மஹாலை 1876 ஆம் ஆண்டு நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 14ஆம் தேதி மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டி அளித்த அவர், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கோடி கோடியாக அள்ளித் தருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய அளவில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டி மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 17 தங்கம் உட்பட 75 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு NCC மாணவர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும், மாணவர்களை சிறப்பாக பயிற்றுவித்த NCC ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உதயநிதி பாராட்டினார்.
சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நாதக சார்பில் வள்ளூவர் கோட்டட்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டினார். இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு அதற்கு காரணம் இன்றைய ஆட்சி எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.