India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சைதாப்பேட்டையில் பீகாரைச் சேர்ந்த யுவராஜ் (11) என்ற சிறுவன் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று இறந்தார். கழிவுநீர் கலந்துவந்த மெட்ரோ குடிநீரை குடித்தே சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 7 வயது சிறுமியும் இதேபோல் மெட்ரோ குடிநீர் குடித்தே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று மருத்துவத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார். சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய அமைச்சர், சில மாவட்டங்களில் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் யுனானி மருத்துவ பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 29) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் (கூடுதல் தலைமை செயலாளர்) ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.90 வரையிலும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.42 வரையிலும், பீன்ஸ் ரூ.75 முதல் ரூ.90 வரையிலும், சவ்சவ் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், முள்ளங்கி ரூ.32 முதல் ரூ.35 வரையிலும், வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்கப்படுகிறது.
நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதியில் வரும் ஜூன் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் ஜூலை 1ஆம் தேதி காலை 9 மணி வரை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அவசரத் தேவைக்கு https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழக சைக்கிள் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வகையில், சென்னை மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழம் அருகே ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை அமைக்கப்படும் என்றார். இது இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் தான் அமையவுள்ளது.
மதுவை ஒழிக்க நடிகர் விஜய் முயற்சித்து வருவதாக பள்ளி மாணவி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பேன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் தலைமையில் இன்று பரிசு வழங்கப்பட்டது. அதில், பரிசு வாங்கிய ஒரு மாணவி, விஜய் கல்விக்கு நிறைய முக்கியத்துவம் தருவதாகவும், அதனால் வரும் தேர்தலில் அவருக்கு நிச்சயம் வாக்களிப்பேன் என்றும் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் ஆகிய 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் chennai.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 1,000 முதல் 18,000 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று முதல்கட்ட (ஜூன் 28) பரிசு வழங்கும் விழா நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறும் இந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கி 10 நிமிடங்கள் உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பொது இடங்களில் உரிய கண்காணிப்பின்றி உரிமையாளர்கள் உடன் இல்லாத நிலையில் பிடிக்கப்படும் மாடுகளுக்கு சீப் பொருத்தப்படும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், அதே மாடு 3ம் முறை பிடிக்கப்பட்டால் ஏலம் விடப்படும், சாலையில் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கும் அதன் உரிமையாளர்கள் இடையூறு செய்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.