India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் இன்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டில்லியில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் சந்திப்பின் போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளான எஸ்கலேட்டர்கள், விரிவாக்கப்பட்ட நடைமேடைகள், சிசிடிவி பாதுகாப்பு கொண்டு மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்தார்.
சென்னையில் தற்போது 16 தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் அயனாவரம் தாலுகாவை இரண்டாக பிரித்து கொளத்தூர், சிறுவள்ளூர், பெரவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கி தனி தாலுகா அமைக்கப்பட உள்ளது. இதற்கான தனி ஆய்வு, தாலுகா அலுவலகம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் கொளத்தூர் தாலுகா உதயமாகும் வகையில் வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அனுமதியின்றி போராடியதாகவும் 2022-யில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு ஒன்று பதியப்பட்டது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றம் வந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைத்து உத்தரவிட்டப்பட்டது.
தமிழகத்தில் ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுப்பணித்துறை ஆறுகளில் இருந்து மணல் எடுத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள 58 புதிய தாழ்த்தள பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. தி.நகர்- திருப்போரூர், பிராட்வே – கோவளம், கிளாம்பாக்கம் – கோயம்பேடு, கோயம்பேடு – கிளாம்பாக்கம், பிராட்வே – திருப்போரூர், பட்டாபிராம் – அண்ணா சதுக்கம், தி.நகர் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – கூடுவாஞ்சேரி, தாம்பரம் – மாமல்லபுரம் உள்ளிட்ட வழித்தடங்களாகும்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு பெற்று மெட்ரோ சேவை பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில் தற்போது இரண்டாம் கட்டம் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டாம் கட்ட பணிகள், வழித்தடம் 3-ல் சிறுவாணி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை வந்தடைந்துள்ளது.
திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கூட்ட அரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர் கல்வித் துறைச் செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ஆபிரகாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தேயிலை தோட்ட பெண் தொழிலாளி அமுதா சென்னையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வனமாக இருந்த பகுதியை தேயிலை தோட்டமாக மாற்ற எங்களது முன்னோர்கள் பெரிய அளவில் பாடுபட்டுள்ளனர். நிரந்தர வேலை வழங்கினால் இழப்பீடு தொகையே தேவையில்லை. தமிழக அரசு எங்களுக்காக நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் தான் அங்கு இருக்கிறோம்” என கூறினார்.
சென்னையில் எந்தவித ஒருங்கிணைப்பும் இன்றி ஒரே நேரத்தில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இவற்றை மூடுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொழிலாளர்களுக்கு எதிராகவும், குடிநீரை கூட தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் காலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.