India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நடப்பாண்டில் குழந்தை திருமணம் தொடர்பாக 18 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்திற்கு யார் உடந்தையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பானிபூரி மற்றும் தெருவோர கடைகளுக்கு, மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. சென்னை மண்டலம் முழுவதும் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்வதாகவும், ரசாயன பொருட்கள் கலந்து விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2ஆவது நாளாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திருவண்ணாமலை தொகுதி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, “சட்டமன்ற தேர்தலில் சிறப்பான கூட்டணி அமையும், அனைவரும் தேர்தலுக்கு உழைக்க வேண்டும். 2026இல் தற்போது இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் உடைய வாய்ப்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
கலிபோர்னியாவில் நடைபெற உள்ள 6ஆவது கேரம் வேர்ல்ட் கப் போட்டியில் தமிழக வீராங்கனை நாகஜோதி காசிமா மற்றும் மித்ரா சார்பில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது. இதை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் வீரர்களிடம் வழங்கினார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நியூசிலாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாய்ஸ் அஷிதா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அவரது செலவினங்களுக்காக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டது. இதனை அவரது தாயிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி கோவில் நாளை(12.7.24) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது. இக்கோவில் அறநிலைத்துறை சார்பில் ரூ.1.12 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொன்மைவாய்ந்த தேவலயங்கள் புணரமைப்பு பணிக்காக 4 தேவாலயங்களுக்கு 4 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலையை தேவாலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். இந்நிகழ்வில் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பெய்த மழையால், நகரின் முக்கிய பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் ஈர்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் கூட்டம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.