India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. ராயபுரம், பெரம்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, சைதாபேட்டை, கிண்டி, ஆயிரம் விளக்கு, அடையாறு, திருவான்மியூர், தி.நகர், வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அதன்படி சென்னை கோட்டூர்புரம், கிண்டி, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், ஜெமினி, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஜெமினி பாலம் கீழ் மழை நீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவர் சேகர் பாபு தலைமையிலான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 2024- 2025ஆம் ஆண்டின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, துறைசார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 17ம்தேதி தென்காசி, திண்டுக்கல், தேனி நாடாளுமன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை நிர்வாகி ஆலோசனை கூட்டம் வேறு தேதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். தென்காசி தொகுதியில் சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. 90 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் இந்த முதல்நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் 797 மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 124 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
கீழ்க்கட்டளை நோக்கிபோகும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி LakeViewRoadல் இருந்து வலதுபுறம் திருப்ப வேண்டும். ராஜேந்திரன் நகர் சாலையில் இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக செல்லலாம். மடிப்பாக்கத்திலிருந்து சபரி சாலை வழியாக வலதுபுறம் திருப்பி Lake View Roadல் வலது புறம் திரும்ப வேண்டும். ராஜேந்திரன் நகர் சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் சாலை வழியாக கீழ்க்கட்டளை செல்லலாம்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நாளை(13.7.2024), நாளை மறுநாள்(14.7.2024) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் இரண்டு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகள் டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்களில் நடைபெற்ற நிகழ்வுகள், விவாதங்கள் புத்தக வடிவில் உள்ளது. அதை மக்கள் பார்வையிடும் வகையில், இணையதளத்தில் பதிவேற்றம் பணிநடைபெற்று வருகிறது. இதில், கருணாநிதி, ஜெயலலிதா என பதிவிட்டால் அவர்கள் பேசியது வரும். கச்சத்தீவு என பதிவிட்டால் அது தொடர்பான வரும்.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலுள்ள அலுவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். வெற்றி வியூகத்தை நான் அமைத்து உள்ளேன். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இப்போது இருந்தே பணியாற்றுங்கள். மாவட்ட செயலாளர்கள், முத்த நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.