India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டகல்வி முடித்த நபர்கள் பார்கவுன்சில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு (ம) புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் P.S. அமுல்ராஜ் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் P. வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. சுமார் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக இடைத்தேர்தலுக்காக திமுக செலவிட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 ரொக்கம், ரூ.4 ஆயிரத்துக்கு பொருளும் திமுக கொடுத்திருக்கிறது” என குற்றம் சாட்டினார்.
சுதந்திர தினத்தையொட்டி மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கு தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில், 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டி, பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் ஜூலை 17ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெறவுள்ளது. என்றார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று(13.7.24) இரவு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பெய்த மழையால், நகரின் முக்கிய பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சென்னை-அயோத்தி, அயோத்தி- சென்னை இடையே இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானங்கள் போதிய சீட்டுகள் விற்பனை ஆகாததால் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் வேறு தேதிக்கு டிக்கெட்டை மாற்றிக் கொடுப்பதாகவும், இல்லையென்றால் முன்பதிவு பணத்தை திரும்பி வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரை மா.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சிலர், மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு முறையாக செயல்படாததன் காரணமாகத்தான் அதிமுக தேர்தலில் 3வது இடத்திற்கு சென்றது என்று குற்றம் சாட்டினார். இதற்கு செல்லுராஜு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இளைராஜாவின் இன்னிசைக் கச்சேரி நாளை(14.7.24) நடைபெற உள்ளது. இந்நிலையில் இளையராஜா கச்சேரிக்கு செல்வோர் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இசைகச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவின் பாட்டு சித்தரித்து வடிவமைத்து வெளியிட்டது அதிமுக தான். அவர்கள் பாடிய பாடல் தான் நாங்களும் பாடினோம். தொடர்ந்து நாம் தமிழர் உடன் அதிமுக கூட்டணி குறித்து பேசிய அவர், எனக்கு கூட்டணி என்பது கோட்பாடு இல்லை” என்று கூறினார்.
எழும்பூர் பணிமனையில் சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை, அப்பகுதியில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது. கடற்கரை – தாம்பரம் இடையே 15 – 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், செங்கல்பட்டுக்கு 40 முதல் 1 மணி நேர இடைவெளியில் ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்கள், தங்கள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், டின் கேன்கள் ஆகியவற்றை அப்படியே கடற்கரையில் விட்டு செல்கின்றனர். இதனால், கடற்கரை பகுதி பார்ப்பதற்கு அலங்கோலமாக தெரிகிறது. இதற்கு, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.