India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் திரிசூலம் ரயில் நிலையம் அருகே, நான்கு மலைகளுக்கு நடுவே திரிசூலநாதர் திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே இங்கு வந்து வழிபட்டால் ஆணவம் அழிந்து வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு சுபிட்சமான வாழ்க்கையை வாழலாம் என்பது நம்பிக்கை. ஷேர்
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
சாலிகிராமம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) அந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (23.04.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்
சென்னை அமெரிக்க தூதரகத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச கோடை வகுப்பு நடந்து வருகிறது. தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பலவகை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3D பிரிண்டிங், VR கணினிகள், அறிவியல், தொழில்நுட்பம், கணிப்பொறி பாடங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கமாகும். இவை மே 5 வரை நடைபெறும் என தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கலந்து கொண்டு பாயான் அடையலாம்.
சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் முக்கியமான திருமணத்தலமாகும். இங்கு கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் ஒன்றாக வழிபட்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கினால் காதலும், திருமணமும் கைகூடும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் காதல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
▶️ விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா – அண்ணா நகர்
▶️ செம்மொழி பூங்கா, தேனாம்பேட்டை
▶️ பனகல் பூங்கா, தி.நகர்
▶️ கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோபாலபுரம்
▶️ திரு.வி.க பூங்கா, ஷெனாய் நகர்
▶️Eco பூங்கா, சேத்துப்பட்டு
▶️ நடேசன் பூங்கா, தி.நகர்
▶️ Eco பூங்கா, அடையார்
உங்கள் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களை இந்த பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்
நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம், வரும் வரும் ஏப்.25ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முற்றிலும் இலவசமாக நடைப்பெறும் இப்பயிற்சி முகாமில், 18 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.