Chennai

News July 6, 2024

நாளை அஞ்சலி செலுத்த வரும் மாயாவதி

image

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல், பெரம்பூர் பந்தர் தோட்ட தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட உள்ளது. இதனையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் உடற்கூறாய்வு நிறைவு

image

பி.எஸ்.பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூறாய்வு நிறைவடைந்து விட்டதாக ராஜிவ் காந்தி மருத்துவமனை தலைவர் தோணிராஜன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள இருபுற சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது இடம் வேண்டுமென ஆதரவலார்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

News July 6, 2024

ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூர் ஆட்டோ ஓட்டுநர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை, ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஒருவாரமாக நோட்டமிட்டு வந்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை; பெரம்பூரில் கடை அடைப்பு

image

பகுஜன் சமாஜ் காட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட உள்ள பெரம்பூர் பகுதியில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில், ஆர்ம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட உள்ளது. இதனால்,  சுமார் 500 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News July 6, 2024

அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு முகாம்

image

சென்னை ‌மத்திய அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட அஞ்சல் ஒய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறை கேட்பு முகாம், வரும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயா நகரில் உள்ள சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் தபாலில், dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அல்லது 8939646404 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தங்களது புகார்களை 10ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

News July 6, 2024

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு தி.நகர், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, ராயபுரம், ஆயிரம் விளக்கு, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாக இரவில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News July 5, 2024

சென்னையில் வெளுக்கும் மழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு (5.7.2024) கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், தே.பேட்டை, தி.நகர் உள்பட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் இதமான சூழல் நிலவுகிறது.

News July 5, 2024

சென்னையில் போலீஸ் குவிப்பு

image

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க சென்னை பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News July 5, 2024

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை

image

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார், தப்பியோடிய மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

News July 5, 2024

சென்னை கலெக்டர் அறிவிப்பு 

image

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2024-25 நிதியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்கிற இணையதளத்தில் மூலம் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!