India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை பார்வையிடுவதற்காக, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் மேகநாத ரெட்டி ஆகியோர் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பாரிஸ் புறப்பட்டு சென்றனர். 4 நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நாளை மதியம் 2:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார். சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (51), சுமார் 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில், ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், தனது பிள்ளைகளுக்கு ‘இதுதான் இறுதிநாள்’ என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை ஒரு தீர்வாகாது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்திலை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக, மும்பையில் போலீசார் முகாமிட்டுள்ளனர். மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியான ஈசாவை, சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரித்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜிடமும் சம்போ செந்திலின் தூத்துக்குடி – சென்னை நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நாளை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மடிப்பாக்கம், நங்கநல்லூர், புழல், விளங்காடுபாக்கம், அடையாளம்பட்டு, கே.கே.டி நகர், வியாசர்பாடி புதுநகர், செம்பாக்கம், வேளச்சேரி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை சென்னை போலீசார் வரும் 21.08.24 வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் இன்று நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் காந்தி, தமிழக முதலமைச்சர் கைத்தறி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும், கைத்தறி உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் எனவும் முதல்வர் பொறுப்பேற்ற பின் நிலுவையிலிருந்த ரூ.700 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.