India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ATM கார்டுகளை வழங்கினர்.
24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக கங்கேஸ்வரி, சைபர் கிரைம் துணை ஆணைராக சரினா பேகம், ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக முத்தமிழ், சைபர் அரங்க கண்காணிப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக மணிகண்டன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஜெயச்சந்திரன், சைபர் கிரைம் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்த்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் தொடர்பாக கடலூரைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, திருச்சி, கோவை, தி.மலை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 275 பேருந்துகளும், நாளை 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடியான நாகேந்திரனின் பெயர் FIR-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், நாகேந்திரனின் மகன் ஆகும். ஆயுள் கைதியான நாகேந்திரன் வேலூர் சிறையில் இருந்தாலும், வடசென்னை சம்பவங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர். இந்நிலையில், அவரை கைது செய்வதற்கு உண்டான ஆணையை செம்பியம் போலீசார் வேலூர் சிறை நிர்வாகத்திடம் வழங்க உள்ளனர்.
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், செங்குன்றம், பெருங்காவலூர், சோழிங்கநல்லூர், மருந்தீஸ்வரர் கோயில் முதல் நீலாங்கரை குப்பம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
சென்னையில் மாநகரப் பேருந்தில் கத்தியுடன் சுற்றிய 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி-திருவொற்றியூர் சென்ற 101 என்ற பேருந்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆபாச பாடல்கள் பாடுவதாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தானியங்கிக் கதவை மூடிவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கத்தியுடன் போதையில் இருந்த 11 மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செய்தனர்.
400 பேருந்து வழித்தட சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் சென்னை மாநகராட்சி இரவு நேரங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் நடந்த தூய்மை பணியை ஆய்வு செய்ததாகவும், அப்போது பகலை விட இரவு தூய்மை பணி மேற்கொள்ள எளிதாக உள்ளதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.