India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 12-ம் வகுப்பு. பயிற்சி கட்டணம் ரூ.18,750. சேர விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளை அகலப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலைகளை விரிவுபடுத்துவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதல் பெற்ற பின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 18) கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, போரூர், எழும்பூர், அம்பத்தூர், ரெட் ஹில்ஸ், புழல், ஐடி கொரிடர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 20ஆம் தேதி(சனிக்கிழமை) மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை சார்பில் சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை இன்று(ஜூலை 16) தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் இருந்தனர்.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜூலை 17) ஒருநாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நெல்லை – ஷாலிமார்(மேற்கு வங்கம்) இடையே 18 & 25 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக ஷாலிமார் – நெல்லைக்கு 20 & 27 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து அதிகாலை 1.50க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்றடையும். ஷாலிமாரில் இருந்து மாலை 5.10 க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் மதியம் 1.15க்கு நெல்லை சென்றடையும்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிசாதமித்ரா 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 200 மீ. பட்டர்பிளையில் தங்கம், 800 மீ. ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளி, 100மீ, 50மீ பட்டர்பிளை போட்டியில் வெண்கலம் வென்று தமிழ்நாடு நீச்சல் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.