Chennai

News July 17, 2024

சென்னை ஏர்போர்ட்டில் வெடிகுண்டு என புரளி

image

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் பவுடர் வடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு மர்ம இ-மெயில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது வழக்கமான புரளிதான் என்று கூறப்படுகிறது.

News July 17, 2024

சென்னையில் அதிகரித்த தொண்டை வலி, காய்ச்சல்

image

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலர் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக 50 பேர் வரை சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் 100 பேர் வரை சிகிச்சை பெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News July 17, 2024

கோயம்பேட்டிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 45 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருவண்ணாமலைக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் சனிக்கிழமை 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

News July 17, 2024

கிண்டியில் வெளிநாட்டு வேலைக்கு INTERVIEW

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற பிளம்பர், எலக்ட்ரீசியன், பர்னிச்சர் பெயின்டர், பர்னிச்சர் கார்பெண்டர் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்து, 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஜூலை 19 அன்று கிண்டி தொழிற்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கும் SHARE பண்ணலாமே!

News July 17, 2024

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; ஒருவரிடம் விசாரணை

image

சென்னையில் இன்று(ஜூலை 17) 2 பள்ளிகளுக்கு E-mail மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது E-mailலில் இருந்து மிரட்டல் சென்றதாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 17, 2024

கோயம்பேட்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி

image

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் இன்று சோதனை செய்தனர். அப்போது, ரூ.48,500 பணம், ரூபாய் நோட்டு போன்ற 20 பண்டல் பேப்பர்களை கைப்பற்றினர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் என்பதும் ரூ.5 லட்சம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி ரூ.10 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததுள்ளது

News July 17, 2024

55 மின்சார ரயில்கள் ரத்து

image

தாம்பரம் ரயில் பாதையில், தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனை சமாளிக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

சென்னை என எப்போது பெயர் மாற்றப்பட்டது?

image

சென்னை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மெட்ராஸாக மாறி பின்னர் மீண்டும் சென்னையாக மாறியது. பெயர் மாறினாலும் மனிதர்கள் மாறுவதில்லை. இன்றைக்கு 386ஆவது சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை தான் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பிழைப்புத் தேடி வருவோரை, மொழி, மதம் என எந்தவித வேறுபாடுமின்றி அரவணைப்பதில் சென்னை பெருநகரை அடித்து கொள்ள யாருமில்லை. ஷேர் பண்ணுங்க.

News July 17, 2024

சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியேற்பு

image

நேற்று சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணனை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்‌. அவருக்கு பதிலாக பள்ளி கல்வித் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று குமரகுருபரன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.

News July 17, 2024

ரத்ததானம் செய்த சூர்யா

image

ரசிகர்களை போல ஒவ்வொரு ஆண்டும் இனி நானும் ரத்த தானம் செய்வேன் என கடந்த ஆண்டு நடிகர் சூர்யா உறுதியளித்திருந்தார். அதன்படி, நேற்று அவர் ரத்த தானம் செய்தார். சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த 14ஆம் தேதி 400க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!