India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்யராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவனிடம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி என்பது திமுகவின் உட்கட்சி விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. தக்காளி ரூ.30, கேரட் ரூ.100, வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.50, எலுமிச்சை பழம் ரூ.120, பீன்ஸ் ரூ.100 என அனைத்து காய்கறி விலையும் சராசரியாக அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெரு நாய்கள் விமான பயணிகள், போலீசார், ஊழியர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் விமான நிலையங்களை சுற்றித்திரிந்த 34 நாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தினர்.
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குறை தீர் முகாம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11.00 மணி முதல் 1 மணி வரை வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆணையரிடம் நேரில் அளிக்கலாம்.
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை நங்கநல்லூர், குபேரன் நகர், எல்ஐசி நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகாம்பாள் நகர், ராஜராஜேஸ்வரி நகர், மாடம்பாக்கம், ராஜ் கீழ்ப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திருவொற்றியூர், கத்திவாக்கம், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளுக்கு புழல் ஏரியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள் இல்லாத இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படவுள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார். சென்னையில் பேட்டி அளித்த அவர், வயநாடு நிலச்சரிவில் தாமதமாக பிரதமர் மோடி பார்வையிட்டாலும், பிரதமர் மோடி பார்வையிட்டதை வரவேற்கிறோம் என்றார். கேரளாவோ, தமிழ்நாடோ எந்த மாநிலமாக இருந்தாலும் பேரிடர் காலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிதி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களிலும், காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ஆக.12,14 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் 1.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.