India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இன்று(19.7.24) இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், இச்சிறப்பு ரயில் இன்று இரவு 11.20க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு நாளை(20.7.24) காலை 11.20 மணிக்கு நெல்லை வந்தடையும். இது எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லை வந்து சேரும்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். அப்போது, மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை அரசு கட்டமைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.40 கோடி வருவாய் வருகிறது. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்த காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு, புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.7 கோடி செலவில் வழங்கியுள்ளார். மேலும், ரூ.14 கோடி செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார். இன்று நேரில் சென்று ஆய்வுசெய்த அவர், கூடுதல் உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால், மாநகர பேருந்து பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில், பிரச்னைக்குரிய இடங்களை போக்குவரத்து போலீசார் கண்டறிந்து, அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. விதிகளை மீறி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால், பறிமுதல் செய்யப்படும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.
தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமையல் கூடத்திற்கு சென்று, உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் , என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் , உணவு உட்கொள்ள வந்த பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனும் உடனிருந்தார்.
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, இன்று பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நடக்கும் இந்த போராட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரடியாக பங்கேற்க உள்ளார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி, மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். நாளை கொலை செய்யப்பட்டு 16ஆம் நாள் ஆகும். போலீசாருக்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இந்த 16ஆவது நாளுக்குள், எதிர்தரப்பினர் ஒருவரை கொலை செய்ய சபதம் ஏற்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னையில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தலா 45 வீதம் 90 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை தலா 15 வீதம் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்பத்தூர், உயர்நீதிமன்றம், திருமுல்லைவாயல், போரூர், வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், அடையாறு, பெருங்குடி, ஆலந்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், புதிதாக பொறுப்பேற்று கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அவர்களை சந்தித்து(ஜூலை 18) தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.