Chennai

News July 20, 2024

ஆகஸ்ட் 31ல் ‘ஃபார்முலா 4’ கார் ரேஸ்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ‘ஃபார்முலா 4’ கார் ரேஸ் பந்தயம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 அன்று நடைபெறவுள்ளது. இப்பந்தயம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு அணியில் 2 வீரர்கள் வீதம் 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.

News July 20, 2024

இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை AIRPORT

image

சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவைகள் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘crowdstrike’ மென்பொருள் அப்டேட்டால் மைக்ரோசாஃப்ட் இணையதளத்தில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

News July 20, 2024

16 விமானங்கள் ரத்து; 30க்கும் மேற்பட்டவை தாமதம்

image

‘கிரவுட்ஸ்ட்ரைக்’ மென்பொருள் மேம்படுத்தும் பணியால் மைக்ரோசாப்ட் இணையதளம் பாதிக்கப்பட்டதால், நேற்று உலகம் முழுவதும் விமான சேவையில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும்(ஜூலை 20) விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News July 20, 2024

நியாய விலை கடைகளில் ஆய்வு

image

கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டையில் பகுதியில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்தார். மேலும் விநியோகிப்பாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

News July 20, 2024

சைவ சித்தாந்த படிப்புக்கான வகுப்புகள் துவக்கம்

image

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை சைவ சித்தாந்தம் (B.A. Saiva Siddhanta) பட்டப்படிப்பிற்கான வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் பேரூர் ஆதினம் முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்: பொது சுகாதாரத்துறை

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை அலுவலகத்தில் இயக்குனர் செல்வ விநாயகம் பருவ மழை எதிர்கொள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு பாதிப்பு தான் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும், இந்த மாதம் பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் காய்ச்சலை தடுப்பதற்கு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்துள்ளோம் என கூறினார்.

News July 19, 2024

7,300 பேர் பாம்பு கடியால் பாதிப்பு

image

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 19,795 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு அதில் 43 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

News July 19, 2024

அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, உணவின் தரம், அளவு, சுவை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அம்மா உணவகத்தில் சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் எப்படி இருக்கிறது எனவும் முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் அவருடன் சென்றுள்ளனர்.

News July 19, 2024

சென்னையில் விமானங்கள் ரத்து

image

மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால், பல்வேறு பகுதியில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து கோவை, விசாகப்பட்டினம், மும்பை, கோவா, டெல்லி, பெங்களுரு, புவனேஸ்வர் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து முறையான பதில் தராததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

News July 19, 2024

அதிமுக ஆலோசனை கூட்டம் நிறைவு

image

பாராளுமன்ற தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் கடந்த 10ந் தேதி முதல் அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறாா். கடைசி நாளான இன்று காலையில் விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 23 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.

error: Content is protected !!