India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் இறந்து இன்று 16ஆவது நாள் ஆகும். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் 16ஆவது நாளுக்குள் பழிக்கு பழி வாங்க சபதம் எடுத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்த வகையில், அவரது ஆதரவாளரான பாம் சரவணன் பழிக்கு பழி வாங்கலாம் என உளவு பிரிவு போலீசார் எச்சரித்ததால் புளியந்தோப்பு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு தான் அரசியல் படுகொலை நடத்தப்பட்டுள்ளது . எப்படி ஜெயலலிதாவும், காந்தியும் திட்டமிட்டு கொல்லப்பட்டார்களோ, அது போன்று ஆம்ஸ்ட்ராங்கையும் கொன்றுவிட்டார்கள். இக்கொலை உளவுத்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என பேசினார்.
சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் அட்டகத்தி தினேஷ் பேசுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை எனவும், தமிழக காவல்துறையினர் வழக்கை நல்ல முறையில் விசாரணை மேற்கொண்டு ஒரு முடிவு எடுப்பார்கள் எனவும். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவர், “தலித் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கவிடாமல் செய்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்றால், நாங்கள் ரவுடிகள் தான். நாங்கள் யார் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரை பார்த்தும் பயப்படமாட்டோம்” என்றார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று “போட்டித் தேர்வு – பதினைந்தும் புதிது” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்புத்தகத்தை காவல்துறை துணைத்தலைவர் முனைவர் ரா.திருநாவுக்கரசு எழுதியுள்ளார். இப்புத்தகத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெற்றுக் கொண்டார்.
திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியபோது, நிதி ஒதுக்கீட்டில் கல்விக்குதான் அதிக நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் திமுக ஆட்சியில் வளர்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்த ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளில் 4,81,075 பேர் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை 21 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அமர இருக்கை இல்லை என தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகளை பேருந்துகளில் கண்ணிடத்துடன் நடத்த வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கை மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்ததை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார். இதையடுத்து இபிஎஸ் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்த மேயர் பிரியா, முதலமைச்சரை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனமில்லை என்றும், பொறாமையிலும் ஆற்றாமையிலும் அவர் புலம்பி தவிப்பதாகவும் ‘x’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் 21 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(ஜூலை 19) வழக்கறிஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை கொண்டு மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.