India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, மந்தைவெளி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, ஷெனாய் நகர், மதுரவாயல், துரைப்பாக்கம், போரூர், திருமுடிவாக்கம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையாறு, பெசன்ட் நகர், அம்பத்தூர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அடையாறு சாஸ்திரி நகரில் சுமதி என்பவரின் வீட்டில் இருந்து நாகாத்தம்மன் சிலை, உலோக உடைவாளை சிலை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சுமதி கொடுத்த தகவலின் பேரில் தங்கராஜ் என்பவரிடம் இருந்து 1 அம்மன் சிலை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சுமதி, பிரகாஷ், கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகிய 4 பேரை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்திற்கு எதிரே 250 கடைகள் உள்ளன. இக்கடை ஒன்றிற்கு, மாதம் 509 ரூபாய் மாநகராட்சி சார்பில் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதில், மூன்று மாதங்கள் முதல் ஓராண்டிற்கு மேலாக, 100 கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்தன. மொத்தம் ரூ.6.50 லட்சம் வரி பாக்கி இருந்தது. இதையடுத்து, ராயபுரம் வருவாய் அதிகாரிகள் தலைமையில் 10 பேர் குழு, பர்மா பஜாரில் உள்ள 100 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
கேரளாவில் நிபா வைரஸ் அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகள் கண்டறியப்படும். நோயாளிகள் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம். உடனடியாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், பரிசோதனையின் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும்.
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று(21.7.24) கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 2023-24ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர்ந்து சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்களை இன்று கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படடனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, தனது நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.150 கோடியில் 220 கி.மீ நீளத்துக்கு 1188 சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 693 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் ரூ.1591 கோடி செலவில் 12,231 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், தற்போது நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐ.சி.எஃப் உட்பட 2 ஆலைகளில், நடப்பாண்டில் 55 அம்ரித் பாரத் ரயில்களை (சாதாரண வந்தே பாரத் ரயில்களை) தயாரிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 22 பெட்டிகளை கொண்ட ஒரு ரயிலில் 8 முன்பதிவு பெட்டிகளும், 11 முன்பதிவில்லாத பெட்டிகளும் உள்ளது.
தாம்பரம் பணிமனையில், பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறவுள்ளது. இதனால், தாம்பரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் ஜூலை 31ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்கள் ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை செங்கல்பட்டு, விழுப்புரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.