India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயிலில் ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீக் ஹவர்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு இரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 18-ம் தேதி வரை கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை 30 பேருந்துகளும், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து பிராட்வே மற்றும் தியாகராய நகர் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடர் விடுமுறையின் எதிரொலியாக ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.2400 முதல் ரூ.3000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணமும் கனிசமாக உயர்ந்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதனை நேற்று விசாரித்த அமர்வு இன்றைக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து இன்று விசாரணை மேற்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கண் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20,21,22,23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தென்சென்னை மக்களுக்கு டி.எம்.எஸ் அலுவலகம், கே.கே.நகர் SRTC மையம் உள்ளிட்ட இடங்களிலும், வடசென்னை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஆங்கீகாரம் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், அவர்களுக்கான படிப்பினை வழங்குதல் உள்ளிட்டவற்றை நிறைவேற்றியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி என கனிமொழி மேடையில் சிறப்புரையாற்றினார்.
கடற்கரைகளை குப்பைகள் கொட்டுவதில் இருந்து பாதுகாப்பது, குறித்து “நம்ம மெரினா நம்ம பிரைட்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகள் சென்னை மாநகராட்சியின் சமூக ஊடக தளங்களில் பதிவிடப்படும். இப்போட்டியில், கலந்து கொள்பவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் விஷவாயுக்கள் மனித உயிர்களை பாதிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் எளிதாக தண்ணீர் டேங்குகளை முன்பதிவு செய்யும் முறையினை வெளியிட்டுள்ளது. தண்ணீர் தேங்கிகளை முன்பதிவு செய்ய காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை https://chennaimetrowater.tn.gov.in/ இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஒருமுறை முன்பதிவு செய்தபின் ரத்து செய்ய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”வரக்கூடிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். உடனடியாக தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய நிதி தொகையை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும். மேக தாதுவில் அணைக்கட்ட ஒன்றிய அரசு கர்நாடகா அரசை அனுமதிக்க கூடாது” என்றார்.
Sorry, no posts matched your criteria.