India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படம், இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதில், நடிகர் விக்ரம் பழங்குடியினரின் வாழ்வியல், கலாச்சாரத்தை கண்முன் காட்டும் வகையில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில், படத்தைக் காண விக்ரமின் ரசிகர் ஒருவர் தங்கலான் கெட்டப்பில் படம் பார்க்க வந்துள்ளார். அவருடன் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அரும்பாக்கம் கம்யூனிட்டி ஹால் தெருவைச் சேர்ந்தவர் முகமது தாரிக். இவர், நேற்று மாலை தனது வீட்டின் ஒரு அறையில் தனியே இருந்துள்ளார். அவரது மனைவி வீட்டின் வேறு ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்களது 1 வயது குழந்தை கழிப்பறைக்கு சென்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து முச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
78ஆவது சுதந்திர தினவிழாவை, தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினவிழாவை கொண்டாடியுள்ளார். மேலும், தனது கட்சி நிர்வாகிகளை அவரவர் பகுதிகளில் சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும் எனவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் எனும் கூறியுள்ளார்.
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 70 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. காலை 10.30 முதல் பிற்பகல் 3.30, இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில்கள் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் செல்லும். ஷேர் பண்ணுங்க.
சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில், 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில், பயணிகளின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மெட்ரோ இரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டை (Ongo Ride Card) வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய (ஆக.14) நிலவரப்படி, மொத்தம் 3.36 லட்சம் சிங்கார சென்னை அட்டைகள் (NCMC Card) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் முதல்வரின் தனி செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், என பல்வேறு இடங்களில் தேசிய மூவர்ண கொடி மூலம் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மூவர்ண விளக்குகளால் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் விஜய் அம்மாள் என்பவர் தனது தந்தை மல்லையா(102) என்பவருடன் இன்று பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்மிற்கு வெளியே நின்ற மல்லையா அருகில் இருந்த ஏ.சி கம்பரசரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. மயங்கிய அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மல்லையா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.