India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாக மின்சார ரயில்கள் வராததால் ரயில் நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
சென்னையில் 152வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, மணலி, சிபி.சி.எல். நகர், சடையங்குப்பம், பர்மா நகர், எலந்தனூர், துவாரகா நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி நகர், வ.உ.சி நகர், விமலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர திருநாள் வரவேற்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.38 – ரூ.46 க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.80 க்கும், தக்காளி ரூ.20 – ரூ.26 க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.45 க்கும், பீன்ஸ் ரூ.40 – ரூ.50 க்கும், சவ் சவ் ரூ.20 – ரூ.25 க்கும், முள்ளங்கி ரூ.10 – ரூ.15 க்கும், முட்டைகோஸ் ரூ.15 – ரூ.20 க்கும், முருங்கைக்காய் ரூ.25 – ரூ.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் நடப்பட்ட மொத்த மரங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என அனைத்து பகுதிகளிலும் இதுவரை, 14948 மரக்கன்றுகள் மொத்தமாக நடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் இன்று நடைபெற்றது. இதில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் முனைவர் ப.வீரமுத்துவேல் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை திருமங்கலம் அருகே பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான மணிரத்தினம், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் தனது கூட்டாளி சுனில் குமார் உடன் திருமங்கலம் சாலையோரம் அருகே பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படம், இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதில், நடிகர் விக்ரம் பழங்குடியினரின் வாழ்வியல், கலாச்சாரத்தை கண்முன் காட்டும் வகையில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில், படத்தைக் காண விக்ரமின் ரசிகர் ஒருவர் தங்கலான் கெட்டப்பில் படம் பார்க்க வந்துள்ளார். அவருடன் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.