India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள யுவராஜ்க்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறப்பட்டதை அடுத்து உத்தரவு, தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுப்ரமணியம், மற்றும் வி.சிவஞானம் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி, சென்னை 2050, நான் விரும்பும் சென்னை, நானும் சென்னையும் என்ற மூன்று தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் 6 லிருந்து 8-ஆம் வகுப்பு வரை சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. போட்டியானது காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரவிருக்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில், துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 7 துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இன்றுமுதல் போரூர்- வடபழனி இடையே போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் மெட்ரோ தூண் அமைக்க ராட்சத கிரேன் பணியில் ஈடுபட்டுள்ளதால் போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி செல்லக்கூடிய ஆற்காடு சாலை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது. மாற்று ஏற்பாட்டின் படி ஆலப்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையை சென்றடையலாம்.
சென்னையில் கடந்த 42 மாதங்களில் 25,423 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், அதிகப்பட்சமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் புறநகர் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் ரயில் நேரம் தெரியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, பயணிகளுக்கு உதவும் வகையில் 044-25354995, 044-25354151 என்ற உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆக.18ஆம் தேதி வரை 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை டிபி சத்திரம் பகுதியில் பெண் எஸ்.ஐ கலைச்செல்வி மீது நேபாள பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் தகராறை தடுக்கச் சென்றபோது கலைச்செல்வியின் முடியை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த காவலர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில் இருந்த நேபாள பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்று வாரியம் வெளியிட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2,477 மில்லியன் கன அடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 91 மில்லியன் கன அடியாக உள்ளது.
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கும், மாதவரத்தில் இருந்தும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. www.tnstc.in
சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வர் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று (16.08.2024) டாக்டர் எம். ஜி. ஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.00 மணிக்குப் புறப்பட வேண்டியிருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த ரயில் காலை 11.15 மணிக்கு தாமதமாக புறப்படவுள்ளது. எனவே மக்கள் அதற்கு ஏற்ப தங்களது பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டு சிரமத்தை தவிர்க்கவும் என தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.