India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் திமுக ஆட்சியில் மட்டுமே உயர்த்தப்பட்டதாக அதிமுக பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டண உயர்வுக்கு அதிமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்றும், அதிமுக ஆட்சியின் போது மின்சாரத் துறையில் நிதி இழப்பு ஏற்படுத்தியதே தற்போது மின் கட்டணம் உயர காரணம் எனத் தெரிவித்தார்
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3500 சரிந்தது. இதனால் சென்னை மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, நகை கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. ஆடி மாதத்தில் நகை வாங்குவது குறைவாக இருக்கும், ஆனால் தற்போது நகை வாங்குவது அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று(ஜூலை 23) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது. அதனால் வணிகர்கள், நிறுவனங்கள் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க முன் வர வேண்டும்” என அறிவுறுத்தினார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ‘இதய கேத்லாப்’ ஆய்வகத்திற்கு சென்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையை எப்படி தூய்மையாக வைத்துகொள்வது என்பது பற்றி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. 3 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமென அண்மையில் தமிழக முதல்வர் வலியுறுத்தியும், நிதி ஒதுக்கப்படவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை, 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்போ செந்திலுக்கும், ஹரிஹரனுக்குமான 10 ஆண்டு கால நட்பு குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும் விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ததன் விவரம், யார் யார் பணம் கொடுத்தார்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் போலீசார் சோதனை செய்யும் ஒரு இடத்தை, கூகுள் மேப்பானது அந்த பகுதியில் போலீசார் இருக்கிறது என பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. ‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மேட் போடுங்க ‘என குறிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான X வலைதளத்தில், பகிரப்பட்ட இந்த இருப்பிடத்தின் ஸ்கிரீன் ஷாட், ஆயிரக்கணக்கானவர்களை லைக் செய்ய வைத்துள்ளது. இந்த பதிவின் கமென்டஸ் பகுதியில் முழுவதும் எமோஜிகளால் நிரம்பியுள்ளது.
இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸ் பணிக்கு 1,337 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்புமுள்ளவர்கள் ஆக.12ஆம் தேதிக்குள் rrccr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் கார்த்திக் (36). இவரிடம் கடந்த 2023ஆம் ஆண்டு ரவுடி சம்போ செந்தில் பெயரை சொல்லி அவரது கூட்டாளிகள் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி ரூ.1 லட்சத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், புது வண்ணார்பேட்டை போலீசார் ரவுடி சம்போ செந்தில் உட்பட 13 பேர் மீது மிரட்டி பணம் பறித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.