India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் தீவிரத் தூய்மைப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணிகளில், நேற்று ஒரே நாளில் மூன்று மண்டலங்களில் உள்ள பிரதான சாலைகளில் 201.01 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் மற்றும்
கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை பயோ மெடிக்கல் பாடப்பிரிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் கீழ் செயல்பட்டது. தற்போது மருத்துவ துறையில் தொடரும் பல்வேறு தேவைகள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயோ மெடிக்கல் துறை தனித்துறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ், பி.இ., பயோ மெடிக்கல் ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படும் என அத்துறையின் தலைவர் சசிகலா தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறி, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் ஏழாவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட் தாக்கலில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்புக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்ககாதது ஏமாற்றம் அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மநீம தலைவர் கமலஹாசன்
NDA பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள், விரைவில் இந்திய பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன் என சுசகமாக விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றன. இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும், தமிழக மக்களின் நலனும் இருக்கிறது. மேலும், தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயம் காணக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இடம் பெறாததால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் ஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது, தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் புறக்கணிப்பதாகும் ” என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சீரற்ற தட்பவெப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகிறது. தொண்டை வலி இருமலுடன் தாக்கும் இந்த மர்ம காய்ச்சல் பரவுவதற்கு கொசு உற்பத்தியே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றிரவு 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது, சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், தீநகர், மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.