India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம். மேலும், கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்நூல்கள் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது உள்ளிட்ட வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதில் பங்கேற்கவில்லை. தனது சொந்த வேலைகளுக்காக வெளியூரில் உள்ளதால் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதையும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சார்பாக முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தியின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முன்புறமாக அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியான சீசிங் ராஜா, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சீசிங் ராஜாவின் மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆந்திராவில் ஒரு முறை போலீஸ் வருவதற்கு முன் சீசிங் ராஜா தப்பி சென்ற நிலையில், இம்முறையும் தப்பியுள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்த முகமது சுகைல் என்பவர், சென்னையில் ஹாஸ்டலில் தங்கி MBA முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்றிரவு நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார். பப்பில் ஆடிக் கொண்டிருந்தபோது முகமது சுகைல் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (WIN TV) சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி ரூ500 கோடி மோசடி செய்த வழக்கில், பாஜக பிரமுகர் தேவநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சோதனை செய்யப்பட்ட நிலையில், ரூ.4 லட்சம், 2 கார்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால், அதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அடையாள அட்டை திருத்த முகாமை மாநகராட்சி நடத்துகிறது.
பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலைகளில் வணிக வாகனங்கள் 10 மணி முதல் 4 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. ஷேர் பண்ணுங்க.
கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலையை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. வாகனங்கள் காமராஜர், நேப்பியர், அண்ணாசாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். இதர வாகனங்கள் பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், PWD வழியாக செல்ல அனுமதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.