India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2022-ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் சென்னையில் விருதுகள் வழங்கினார். அந்த வகையில், மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில், திருச்சி மாவட்டத்தில் உள்ள மனச்சநல்லூர் காவல் நிலையம், பெரம்பலூர்,அரியலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர காவல் நிலையங்கள் என ஒன்பது காவல் நிலையங்கள் விருதுகளை பெற்றது
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் விலை முதல்வரின் உத்தரவுக்கு பிறகே உயர்த்தப்படும் என்றும், தற்போது விலை உயர்த்தப்படாது எனவும் கூறினார். மேலும், மத்திய அரசு ஐ.சி.யுவில் இருப்பதால் அவர்களுக்கு யார் ஆக்சிஜன் தருவார்களோ அவர்களுக்கு நிதி அதிகரித்து வழங்கப்படுள்ளது, என பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்தார்.
சென்னையை சேர்ந்த மோனிஷ் ராய் என்ற பெண். பிரபல நாம் தமிழர் கட்சி நிர்வாகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் தன்னுடைய காதலனுடன் செல்போனில் பேசியதை திருச்சி சூர்யா ஹேக் செய்து எங்களது உரையாடல் பதிவை, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் என மோனிஷ் ராய் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று(ஜூலை24) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தாட்கோ பணிகளின் செயலாக்கம், வன உரிமைச்சட்டம் & பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்தன்மை குறித்த ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மதிவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் சம்பந்தம் இருப்பதாக கூறி, முகப்பேரை சேர்ந்த பாஜக நிர்வாகியான மின்ட் ரமேஷை நேற்று முன்தினம் போலீசார் விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்தனர். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றதில் கொலைக்கும் மின்ட் ரமேஷுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 170 பயணிகளுடன் இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் அந்தமான் வான் எல்லைக்குள் சென்ற போது மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது. இதையடுத்து வேறு வழியின்றி விமானம் சென்னைக்கே திருப்பி கொண்டு வர உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர், அந்தமானில் இருந்து விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சி.ஃபெர்னான்டஸ் ரத்தின ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உடனிருந்தனர்.
ஒடிசாவில் இருந்து சிறுமிகளை வேலைக்காக சென்னை அழைத்து வந்த ஒடிசாவை சேர்ந்த ஆகாஷ் என்பவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சென்னை வந்தவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக காத்திருந்த போது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சிறுமிகளை அரசு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 85 இருசக்கர வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.74 இலட்சம் செலவில் இந்த வாகனங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ளது. இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் இந்திய அளவில் சிறந்த நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதினை வென்றுள்ளார். இதனையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெங்கடேஷை நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது, விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் துறை சார்ந்தவர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.