India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னையில் வரும் 25ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். அதற்கு அனுமதி அளிக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை 604 கி.மீ தூரம் நீச்சலடித்து சாதனை படைத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்டிசம் மாணவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா, மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
சென்னையில் இன்று ஒரு நாளில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை சென்னை பெருநகர காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. செம்பியம் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒருவர் கைது, வியாசர்பாடியில் பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் இருவர் கைது, அபிராமபுரத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது. கோடம்பாக்கத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ஒருவர் கைது.
பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்குவார்கள். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம், என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லவன் இல்லம் அருகே சிஐடியு, ஏ ஐ டி யு சி, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வரவு, செலவு வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், ஊதிய முரண்பாடுகளை சரி செய்து மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், 2022 டிசம்பர் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வரை கடல் மீது மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டால் சாந்தோம் நெடுஞ்சாலை, கீரின்வேஸ் சாலை, சர்தார் படேல் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ள டிரோன்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகளை இந்த டிரோன்கள் மூலம் வழங்க முடியும் என்பதால், இம்முறையை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆக. 19) சந்தேகத்தை ஏற்படுத்தும் படியாக 3 நபர்கள் அட்டைப் பெட்டிகளுடன் வந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது அரிசி, மளிகை பொருட்களை மலேசியா கொண்டு செல்வதாக தெரிவித்தனர். பின்னர், பெட்டி சோதனை செய்ததில், ரூ.15 லட்சம் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
சென்னையில் ஜனவரி 1 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 862 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரையிலான ஒரு வார காலத்தில் 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணிபுரியும் ஊழியர்கள் இன்று அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 22-ஆம் தேதி முதல் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சம்பளத்தை பிடிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.