India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அண்ணா சாலையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது, “ஆந்திரா, பீகார் மாநிலங்கள் மத்திய பாஜக அரசை தாங்கி பிடிப்பதால் அவைகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புறக்கணிப்பினால் பிரதமர் மோடி எங்களுக்கு பிரதமர் அல்ல” என கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு அரிசி பாமாயில் போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பொருட்கள் முழுவதுமே குடும்ப அட்டை மற்றும் விரல் ரேகை வைத்து பெற்று கொள்ளப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களை பெறும் முறை நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 90 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக முன்னாள் பிரமுகர் அஞ்சலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து ரூ.43 லட்சம் வரை வசூல் செய்த வழக்கில் அஞ்சலையை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அஞ்சலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரை போலீசார் காவலில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சிறந்த முறையில் 2022 ஆம் ஆண்டு சேவை பணியாற்றிய காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் சென்னையில் கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். தெற்கு மண்டலத்தில் உள்ள மதுரையில், உசிலம்பட்டி காவல் நிலையம், விருதுநகரில், வெம்பக்கோட்டை காவல் நிலையம், தேனியில், கடமலைக்குண்டு காவல் நிலையம், திண்டுக்கல்லில் நத்தம் காவல் நிலையம் என பத்து காவல் நிலையங்கள் பாராட்டு பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவில் விரைவில் தமிழ் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை சவூதி அரேபிய ரியாத் தமிழ் சங்க நிர்வாகி சந்தோஷ் நேரில் சந்தித்து தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான இரண்டு புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற கூட்ட தொடரில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அறிவித்த அறிவிப்புகள் மற்றும் முன்னேற்ற பணிகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. தலைமை செயலக அலுவலகத்தில் நடந்த
இந்நிகழ்வில் அரசு செயலாளர் சித்திக், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹமான், சட்டமன்ற உறுப்பினர், ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான ஆய்வு கூட்டம் நல்லபடியாக நடந்தது என தெரிவித்தார். மேலும், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது என்றும், பிரதமர் எல்லாருக்கும் பொதுவானவராக உள்ளதால் அவர் பாரபட்சமாக செயல்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.
சென்னையில் இன்று(ஜூலை 25) ஒருநாள் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. ‘சர்தார் 2’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கவனமாக இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் இன்று ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.