India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 22.07.2024 முதல் 24.07.2024 வரை 4,8,13 மற்றும் 14 ஆகிய மண்டலங்களில் இரவு நேரங்களில் தீவிர துப்புரவு பணி நடைபெற்று வருகின்றன. இந்த 3 நாட்களில் 47 இடங்களில் 682 தூய்மை பணியாளர்களை கொண்டு 397 வாகனங்கள், 126 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், 493 காம்பேக்டர் மூலம் சுமார் 174 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் மற்றும் 732 மெட்ரிக்டன் கட்டிட கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.
நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் குடியிருப்போர் நலச்சங்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த. மோ. அன்பரசன் வெற்றி பெற்ற குடியிருப்போர் நலச்சங்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 த்திற்கான காசோலையை வழங்கினார்.
தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினர். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் என்றார்.
தாய்லாந்து நாட்டின் தலைமை துணை தூதர் ரச்சா அரிபார்க் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டி ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின்போது தாய்லாந்து நாட்டின் இதர தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு ஆளுநரின் தனிச் செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரது வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் கைதான நிலையில், ஒருவர் எங்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பதால், இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் ராயன் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நடிகர் தனுஷின் 85 அடி உயர கட்டவுட் வைத்து பட்டாசு வெடித்து ரசிர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் கேட்பாரற்று பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றி ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 கேட்பாரற்ற வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க போலீசாரின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஸ்திரேலியாவின் துணை தூதர் சிலாய் ஜாக்கி மற்றும்
துணை கான்சல் ஜெனரல் டேவிட் எக்லெஸ்டன் ஆகியோரை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது, ஆஸ்திரேலியா நாட்டின் பால் உற்பத்தி தொடர்பாக பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து, தமிழ்நாட்டிலும் அதனை பின்பற்றி பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோனை மேற்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய மூன்று பேருக்கு, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில் இன்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். உண்மை நிலையை கண்டறிய, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.