India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற உள்ளது. அப்போது, முடிவுற்ற 19 புதிய திட்டங்களை அவர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது. அதோடு, 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அடையாறு, ஹஸ்தினாபுரம், மடிப்பாக்கம், ஷுலா நகர், அன்னை தெரேசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர், ராஜராஜேஸ்வரி நகர், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்து பெரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க.
சென்னை நகர் முழுவதும் வீட்டு வாசல்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டின் முன் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் விபத்துகளும் ஏற்படுவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக வரும் 27-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மூலம் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக.23, 24-ஆம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 70 மற்றும் மாதாவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன. மேலும், ஆக.25,26-ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அரவணைக்கும் சென்னை என்ற திட்டத்தின் கீழ், சென்னையில் வீடற்று சாலைகளில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் பல உதவிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. குறிப்பாக, தற்காலிக காப்பகங்கள், திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்குதல், உள்ளிட்டவைகள் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி இந்த உதவிகளுக்கான எண்களை 1913 மற்றும் 044-25303849 வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இவ்வாறு கரைப்பதற்கு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் விநாயகர் ஊர்வலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடைமுறைப்படுத்த சென்னை காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழ் மற்றும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரையே ஜனாதிபதி ஆக்கியுள்ளார். சமூகநீதி காவலராக நமது பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்” என பேசினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ஆம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு மருத்துவ இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
கலை பண்பாட்டு துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவிலான குரல் இசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இவை வரும் 24ஆம் தேதி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரி வளாகத்தில் நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் முன்பதிவு நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
Sorry, no posts matched your criteria.