India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகர பேருந்துகளை தனியார் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை கொண்டு இயக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஒப்பந்த புள்ளி சமர்ப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 28 ஆகும். அன்றைய தினமே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பை மீறி ஒப்பந்தப்புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள தெரிவித்து வருகிறது. அத ஒரு பகுதியாக, மத்திய அரசை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பாக போராட்டம் நடத்தப்படு உள்ளது. அந்த வகையில், நாளை மாலை 4.00 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .
மத்திய அரசையும், மத்திய பட்ஜெட்டையும் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளச்சாரயம் அருந்தி உயிரை மாய்த்து கொள்பவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கூடாதென தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் அரசு வழங்கிய இழப்பீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளச்சாரய உயிரிழப்பை பேரிடராக கருத கூடாது எனவும் சென்னையை சேர்ந்த குமரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடியானது.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் கார்கில் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேசிய பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், எல்லா மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்றும், அவர் இப்போது மட்டுமல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சதீஷ் என்ற மாங்கா சதீஷ்(26) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா,1260 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நெடுஞ்சாலைப் பாலங்களுக்கு உரிய மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள், 11 தொகுதிகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் திட்டம், வடிவமைப்பு, ஆய்வுகளால் தயாரிக்கப்பட்டுள்ள ‘STANDARD PLANS FOR HIGHWAY BRIDGES-RCCT BEAM AND SLAB SUPER STRUCTURE’ என்ற புத்தகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “எனது மகன் இன்று பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை, அவனது தாத்தா அன்பாக தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றார். நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் நீங்கள் சிறந்தவர். திரையிலும், நிஜத்திலும் என் அன்பான அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் 200க்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகததால், நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை 15 நாளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். இதற்காக காவல் நிலையங்கள் தோறும் எஸ்.ஐ. தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளை பசுமையாக்கும் நோக்கத்துடன், மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. சென்னை வாழ் மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த மாதம் 25ஆம் தேதி வரை மொத்தம் 10,191 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், வடசென்னையில் 4,860, தென்சென்னையில் 685 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.