Chennai

News July 26, 2024

மெட்ரோ வழித்தடத்திற்கு ரூ.1.74 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து

image

பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கு ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

News July 26, 2024

சிறுவன் மற்றும் தாயாருக்கு சிகிச்சையளிக்க உத்தரவு

image

2018-இல் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகாஷ் ஹரி மற்றும் அவரின் தாயாருக்கு கடந்த 6 ஆண்டுகள் மேலாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில், இன்று முகாம் அலுவலகத்தில், அவர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

News July 26, 2024

விருது பெற்ற சிறுமியை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

image

Rubiks Cube விளையாட்டுப் போட்டியில், Asia Records, India Book of Records, Ingenious Charm World Records உள்ளிட்டவை வழங்கிய சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பெற்ற சிறுமி லக்ஷிதா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தான் வென்ற விருதுகளை காண்பித்து முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார். இதில், அவரது தாய் மோனிஷா, சகோதரர் செல்வன் ஆனந்த் உடனிருந்தனர்.

News July 26, 2024

நான்கு மண்டலமாக பிரிக்கும் நோக்கில் களம் இறங்கியது – தமாக கட்சி

image

சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியை பலப்படுத்த 234 தொகுதியினை நான்கு மண்டலங்களாக பிரித்து, முதல் நாளான இன்று சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News July 26, 2024

ரூ.2.33 கோடி மதிப்பிலான வடிகால் பணிகள் தொடக்கம்

image

கடந்தாண்டு மிக்ஜாம் புயலின் போது பெய்த கனமழையால் இராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு புதிதாக ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிக்கால் அமைக்கும் பணியினை மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

News July 26, 2024

மயிலாப்பூரில் திமுக ஆலோசனை கூட்டம்

image

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி, அதனை கண்டித்து திமுக சார்பில் நாளை வேளச்சேரி மெயின் ரோடு சின்னமலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு தலைமையில் இன்று மயிலாப்பூர் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

News July 26, 2024

சென்னை போர் நினைவிடத்தில் கார்கில் வெற்றி தின அஞ்சலி

image

இந்தியா முழுவதும் கார்கில் வெற்றி தினம் இன்று (ஜூலை26) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கார்கில் போர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

News July 26, 2024

கல்லூரி மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் திறப்பு

image

சென்னையில் பெருநிறுவன சமூக பொறுப்பின் கீழ், பின்தங்கிய கல்லூரி மாணவர்களின் தொழிற்கல்வி படிப்புகளுக்காக கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது. விவேகானந்தா பண்பாட்டு மையம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் உடன் சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் காமராஜ் துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. முதற்கட்டமாக 13 கணினிகள் கொண்ட ஆய்வகத்தை காமராஜ் போர்ட் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா திறந்து வைத்தார்.

News July 26, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள திருமலையின் உறவினர் பிரதீப் என்பவரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை வைத்து முகிலன் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 26, 2024

கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க எடப்பாடி திட்டம்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதாவது, பாஜகவுடன் கூட்டணி இல்லாமலே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்றும், அதற்காக கிராமம் கிராமமாக சென்று கடுமையாக உழைப்பு வேண்டும் எனவும், சரியாக செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!