India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, கைவிடப்பட்ட வாகனங்கள் தீவிரமாக அகற்றப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் 85 வாகனங்கள் உட்பட இதுவரை 816 வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளும்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், ஆளுங்கட்சி தலைவர் இராமலிங்கம் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாத நியமனக்குழு கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிற்றரசு, ராஜா அன்பழகன் மற்றும் சென்னை மாநகராட்சி அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பகுதிகளில் காலை உணவும் வழங்கப்பட்டு வந்தது. த.வெ.க. அரசியல் கட்சியாக மாறிய பிறகு, சென்னையில் விலையில்லா காலை உணவு தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் காலை உணவு வழங்குவது இரண்டு வருடங்களை கடந்தும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் முறையாக நிறுத்தாத வாகனங்களாலும், சாலையோரம் வெகுநாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. பாதசாரிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தடுக்கும் விதமாக இன்று நுங்கம்பாக்கம் பகுதியில் சாலையோரம் இருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. மூன்றாவது நாளாக மாநகராட்சி இப்பணியை தொடர்கிறது.
சென்னை பெருநகர காவல்துறை தற்போது சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் தற்காப்பு பயிற்சி அளித்து வருகிறது. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எவ்வித கட்டணமின்றி தற்காப்பு கலையை பயிற்றுவிக்க விரும்பும் நிறுவனங்கள் 9840840166 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என பெருநகர சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை நிலை குழுவின் மாதாந்திர கூட்டம் நிலைக் குழுத் தலைவர் (கணக்குகள்) தனசேகரன் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. மண்டலம் 13, 15 மற்றும் சிறப்பு திட்டம் மற்றும் பேருந்து சாலைகள் துறை ஆகிய விவரங்களை உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிலுவைப் பத்திகள் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டிற்கான ஆற்றல் திறன்மிக்க குடியிருப்புகள் அமைப்பது குறித்து கட்டடம் மற்றும் மனை விற்பனையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
நுங்கம்பாக்கம், தாஜ் கோரமண்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி தலைமையில் அத்துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநில எல்லைப் பகுதியிலுள்ள பிற மாநிலங்களின் அலுவலர்களுடன் அடிக்கடி கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, அரிசிக் கடத்தலை அறவே தடுத்திட வேண்டுமென்றும் அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியானது. இந்நிலையில், இளநிலை இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.exam.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.