India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நுங்கம்பாக்கத்தில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது, அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கும் பள்ளிகளில் காலை, மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னரே 1921 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. காற்றின் வேகப்பாடு காரணமாக கோயில்களில் ரோப்கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் விரைவில் BSNL 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக 2,114 டவர்கள் நிறுவும் பணி நடைபெற உள்ளது. இந்த டவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிறுவப்பட உள்ளன. BSNL 2ஜி/4ஜி சிம் உபயோகிப்பவர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், விற்பனை முகவர்களிடமும் பிஎஸ்என்எல் 4ஜி சிம்மை இலவசமாக மாற்றி கொள்ளலாம் என அறிக்கையில் BSNL தெரிவித்துள்ளது.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C cut பேருந்து, தடம் எண்.104C என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C பேருந்து, தடம் எண்.104CX என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரதீப் நேற்று(ஜூலை 26) கைது செய்யப்பட்டார். பெரம்பூரை சேர்ந்தவர் பிரதீப். இவர் கொடுத்த துல்லியமான தகவல்களே இப்படுகொலைக்கு பெருமளவு உதவியதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், பிரதீப்புக்கு சித்தப்பா முறை வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘THUG LIFE’ திரைப்படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சமீபமாக 3 ஆம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளது அதில் ‘THUG LIFE’ படத்தின் டப்பிங் பணியை சிம்பு தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய திமுக முன்னாள் பொருளாளரும், சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு 2-ஆவது வார்டு உறுப்பினரும், மாவட்ட திட்டக் குழு உறுப்பினருமான A.K. மதிவாணன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று(ஜூலை26) சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
சென்னையில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று போதைப் பொருள் விற்பனை குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், மவுண்ட் ரோடு புகாரி உணவு விடுதிக்கு பின்புறம் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நான்கு டன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.16 லட்சம். மேலும், குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது என துறையின் மேற்பார்வையாளர் சதீஷ் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “தேர்தல் தோல்விக்கு பிறகாவது பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டும். அதிமுக மீண்டும் இணைந்தால் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். தொண்டர்கள் விருப்பப்பட்டால் பொறுப்புகளோடு கட்சியில் இணைவேன். இல்லையெனில் அடிப்படை உறுப்பினராக கூட கட்சியில் இணைவேன்” என்றார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழத்தில் கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாதுகாப்பில் தன்னிறைவு அதிகரிப்பதாலும் , தனியார் துறையின் சக்தியைப் பயன்படுத்துவதாலும் நமது நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது என்று பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷ் உறவினரான பிரதீப் என்பவரை செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிரதீப் கொலை கும்பலுக்கு உதவியது தெரியவந்தது. கைது செய்த பிரதீப்பை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, போலீசார் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். இதுவரை ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.