India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் விளக்கும் கூட்டம் ஆலந்தூர் தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். மேலும், இக்கூட்டத்தில் தமிழகம் எந்த அளவிற்கு பயன் பெற்றிருக்கிறது என்பது குறித்தும் பட்ஜெட்டின் பொதுவான சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், இங்கு வரும் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளன. ஆனால் அதில் அமர முடியாத நிலையே உள்ளது. இங்குள்ள பல இருக்கைகள் உடைந்துள்ளதால் , பயணிகள் தரையில் அமர்கின்றனர் . குறிப்பாக, முதியோர்கள் பெண்கள் என பலரும் வெகு நேரம் நின்றபடியே அவதியடைகின்றனர்.
தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் இன்று(ஜூலை 26) காலமானார். இவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்என்.ரவி, “செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன். அவர் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். சரியான அணுகுமுறையில் காவல்துறை செயல்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகளை தான் கைது செய்துள்ளனர் என என்னிடம் தெரிவித்தார்” என கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக அரசு சமூக நீதி பேசுவதில் இல்லாமல் அதனை அமல்படுத்த வேண்டும், மாஞ்சோலை மக்களை வெளியேற்றினால், அவர்கள் தற்கொலை செய்யக்கூடிய நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள் என்றும், இதற்கு தமிழக அரசு ஒருபோதும் வழி ஏற்படுத்தி விடக் கூடாது எனவும், வனஉரிமை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் வைணவ பாடங்களில் தேர்ச்சி பெற்ற 65 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். ஸ்ரீரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய முதுகலை வைணவம் மற்றும் முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகியவற்றில் இவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் எழுதிய “சின்னச்சின்ன நீதிக் கதைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் வாணி மஹாலில் உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி “சின்ன சின்ன நீதி கதைகள்” புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஜெ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில பாஜக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் திருவுருவ படத்திற்கு, சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் விஜய் ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், காவல் துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. மேலும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி 2 லட்சம் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதையொட்டி, தாம்பரம் ரயில் நிலையத்தில், கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த பணிகள் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.