India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாழம்பூரில் உள்ள PSBB என்ற தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கு Boms present in class room, ஜாபர் சாதிக் மெத் இஸ்யூ என்ற வாசகம் அடங்கிய மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, பள்ளி முதல்வர் ருக்மணி புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த மாதம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், டிஎன்பிஎஸ்சியில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்படும் எனக் கூறினார். அடுத்த 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடியில் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் உள்ளதாகவும், கட்சி கொடியில் உயிருள்ள விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது தேசக்குற்ற வழக்கு பதிவுசெய்ய கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மலர்கொடி, பாஜக நிர்வாகி அஞ்சலை, ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை நேற்று இரவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் இந்த மையதானம் தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த கால்பந்து வீரர் – வீராங்கனையரை உருவாக்கட்டும், அதற்கு எந்நாளும் துணை நிற்போம் என்று கூறினார்.
பாடி புதுநகரில் ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், பாடி குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, காளிதாஸ்க்கும், மணி என்ற ரவுடிக்கும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணி, காளிதாஸை தான் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் படுகொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் புதன்கிழமை (ஆக.23-28) வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இன்று மற்றும் நாளைக்கு (வெள்ளி, சனிக்கிழமை) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். பெற்றோர்களுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி சென்னை செல்லும் ரயிலில் ஏறி சென்றதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுமி ஆந்திரா சென்ற சிறுமியை சென்னை போலீசார் விசாகப்பட்டினத்தில் இருந்து மீட்டு வந்தனர்.
சென்னை பெரியமேட்டில் உள்ள உணகம் ஒன்றில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் உணவகத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில், காலை முதலே பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியினை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், கட்சி நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் ‘தமிழக வெற்றி கழகம்’ என வசனங்களுடன் கொடியினை ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை எழும்பூரில் நிர்வாகிகள் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.