Chennai

News July 28, 2024

சாராய கொலை திசை திருப்பவே நீட், மெட்ரோ: கருநாகராஜன்

image

மத்திய அரசின் சாதனை பட்ஜெட் விளக்கும் விதமாக பொதுகூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் பேசியது :- சாராய படுகொலை திசை திருப்பவே மெட்ரோ, நீட் போன்ற திட்டங்களை கையில் எடுக்கிறார்கள். திமுக கட்சிக்கு எதிராக 3 குற்ற வீடியோ பைல் வெளியிட்டோம். அதற்கு நீங்கள் மறுத்து பேச யாரும் தயாராக இல்லை என பேசினார்.

News July 28, 2024

டி.பி.ஐ வளாகம் முற்றுகை: டிட்டோ ஜாக் அறிவிப்பு

image

சென்னையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோ ஜேக்) மாநில அமைப்பு மயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: அவர் தெரிவிக்கையில், ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 3 நாட்கள் சென்னை டி.பி.ஐ. கல்வி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 

News July 28, 2024

பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா: செல்வ பெருந்தகை

image

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட பாமக இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா எனவும், 2011ல் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினோம். ஆனால் 2021ல் மோடி அரசு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. இதை பாமக நிறுவனர் மோடியிடம் கேட்பாரா? பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா என்றார்.

News July 28, 2024

வீடியோ கால் பேசும் போது கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு

image

சென்னை வடபழனியில் 4ஆவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி வீடியோ கால் பேசிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன், தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார் என தனது பெண் தோழிக்கு காட்ட வீடியோ கால் பேசிய போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அச்சிறுவன் உயிரிழந்தார்.

News July 28, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

News July 28, 2024

மூதாட்டியின் சடலம் கைப்பற்றப்பட்டது

image

எம்.ஜி.ஆர். நகர் தெருவைச் சேர்ந்த விஜயா (78) என்பவரை, கடந்த 19ஆ ம் தேதி முதல் காணவில்லை என அவரது மகள் லோகநாயகி போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவர, போலீசார் கொலை செய்த தம்பதியை கைது செய்தனர்‌. அவர்கள் மூதாட்டியை கொலை செய்து ஆற்றில் வீசியதாக கூறப்பட்ட நிலையில், இன்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் கிழக்கு சாலை கால்வாயில் இருந்து சடலம் கைப்பற்றப்பட்டது.

News July 28, 2024

மின்சார ரயில் ரத்து: பணியில் கூடுதல் போலீசார்

image

தாம்பரம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News July 28, 2024

எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள்

image

எழும்பூர் மின்பாதையில் நடைபெறும் பணி காரணமாக, எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை இடையே காலை 7:45 முதல் மாலை 7:45 வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. பயணிகள் அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

News July 28, 2024

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

image

ஆடி மாதத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ சந்தையில், நேற்றைவிட பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.2000, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140, சாக்லேட் ரோஜா ரூ.180, வாட மல்லி ரூ.150, ஜாதி மல்லி ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 28, 2024

கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 28) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.38க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.75க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.45க்கும், தக்காளி ரூ.28 – ரூ.35க்கும், சவ் சவ் ரூ.25 – ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.20 – ரூ.25க்கும், முட்டைக்கோஸ் ரூ.25 – ரூ.28க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.25 – ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!