India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தேமுதிக அலுவலகத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் உருவத்தை டாட்டூ போடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை, பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேமுதிக தொண்டர்கள் 71 பேர், தங்கள் கையில் விஜயகாந்தின் முகத்தை ‘டாட்டூ’ வாக போட்டுக்கொண்னர். இதில், தேமுதிக திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் புதிய சில புகைப்படங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் மேலும் சில புகைப்படத்தை போலீசார் பெற்றதால், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதத்தின் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 485 பேருந்துகளும், நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 – 25 – ம் ஆண்டுக்கான குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி டெக்னிசியன், மோட்டார் வாகன மெக்கானிக் படிப்பிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆகஸ்ட் 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்நிறுவனம் திறக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்று எம்.பி கலாநிதி வீராசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கோரமண்டல் நிறுவனத்தில் அம்மோனியா பயன்படுத்த மாசு கட்டுப்பாடு விதித்த தடையை இன்னும் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சிறுசேரி, பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்து 2028 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 3 வழித்தடங்களில் 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் செயல்பாட்டிற்கு வரும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் திருமாவளவனின் பேச்சுக்களால் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலிட உத்தரவு வந்ததும் அவருக்கு தற்போது வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புழல் சிறையில் தலா 1 லாரி ஓட்டுனர், நெசவு போதகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. லாரி ஓட்டுனர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்து கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். நெசவு போதகர் பணியிடத்திற்கு கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 பணியிடங்களுக்கும் வயது 18 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். செப்டம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.