Chennai

News March 14, 2025

பட்ஜெட்: சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம்

image

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது. சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: வேளச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்

image

2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ., தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: சென்னையில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்

image

2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சென்னை மாநகரப் பகுதியில், முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

சௌகார்பேட்டையில் ஹோலி கொண்டாட்டம்

image

சென்னை சௌகார்பேட்டையில் இன்று (மார்.14) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இளம் வயதினர், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கலர் பொடி பூசியும், கலர் கலந்த தண்ணீரை அடித்தும் கொண்டாடினர். இதனால் சௌகார்பேட்டையே வண்ணமயமாக மாறியது. இதுதவிர, சேத்துப்பட்டு, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் ஹோலி கொண்டாடினர். நீங்களும் மறக்கமா கலர் பூசி ஹோலி கொண்டாடுங்க.

News March 14, 2025

ஹோலி கொண்டாட ஆசையா?

image

இந்தியா முழுவதும் இன்று (மார்.14) ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. வடஇந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்றால் நாம் ஹோலி கொண்டாடலாம். குறிப்பாக, சவுகார்பேட்டை, கீழ்பாக்கம், வெப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய இடங்களுக்கு சென்றால் ஹோலி கொண்டாடலாம். ஹோலி பண்டிகையை கொண்டாட பெரும்பாலும் இளம் வயதினரே விரும்புகின்றனர். இந்த இடங்கள் அவர்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கும்.

News March 13, 2025

20 வங்கிகளில் மருத்துவர் கடன் வாங்கியுள்ளதாக தகவல்

image

சென்னை: திருமங்கலத்தில் 5 கோடி கடன் பிரச்சனை காரணமாக இரு மகன்களை கொலை செய்து, மருத்துவர் பாலமுருகனும் (52), அவர் மனைவி வழக்கறிஞர் சுமதியும் (47) இன்று காலை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறை விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

News March 13, 2025

சென்னை மக்களே WEEK END பிளான் ரெடி!

image

கம்பீரமான மலைகள், பசுமையான காடு, சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட நாகலாபுரம், அமைதியான சூழலில் ஒரு நாளை கழிக்க ஏற்றது. சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள இங்கு ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில், கைலாசகோனா நீர்வீழ்ச்சி, உப்பலமடுகு நீர்வீழ்ச்சி, குர்ரம்கொண்டா கோட்டை ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். லொகேஷனுக்கு <>இங்க கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <>விண்ணப்பியுங்கள்<<>>.

News March 13, 2025

சென்னையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு சிக்கல்

image

சென்னையில் புதிதாக கார் வாங்க வேண்டுமானால், இனி அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதாவது, கார் வாங்குபவர் வீட்டிலோ அல்லது தனியார் இடத்திலோ கார் நிறுத்துவதற்கான இடம் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் புதிய கொள்கையை ஏற்றது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். விரைவில் இந்த கொள்கை அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 13, 2025

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

image

சென்னை திருமங்கலம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பாலமுருகன், மனைவி சுமதி (வழக்கறிஞர்), மகன்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!