India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சென்னை அந்திமழை இதழ் நிறுவனர் ந.இளங்கோவன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இளங்கோவன் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ‘கரன்சி காலனி’, ‘ஊர் கூடி இழுத்த தேர்’ ஆகிய நூல்களை எழுதி, மிகச்சிறந்த இலக்கிய பணியை ஆற்றி சென்றிருக்கும் இளங்கோவன் பிரிவு அச்சு ஊடகத்திற்கு பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.
கடந்த 20220-ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், விருது வழங்கி கௌரவித்தார். சென்னை பெருநகர வடக்கு மண்டலம் பூக்கடை காவல் நிலையம், அமைந்தக்கரை காவல் நிலையம், அயனாவரம் காவல் நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம், கண்ணகி நகர் காவல் நிலையம் உள்ளிட்ட பத்து காவல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
சென்னையில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து 16 தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக தேடப்படும் சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரது கூட்டாளி ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹரிஹரனுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு தப்பி சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரையில் இருந்து கிருஷ்ணன் விமானம் மூலமாக தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு தப்பி சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இடைநிலைபள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட ஆசிரியர்கள் வரும் வழியிலேயே ஆங்கங்கே கைது செய்யப்பட்டனர். அதன்படி, தற்போது வரை 1500-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் விரைந்து முடிக்கப்படும் எனவும், அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதனை ஏற்படுத்தி கொடுக்க தயாராக உள்ளோம் என கூறினார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடித்து, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்வில் ஏம்எல்ஏ எழிலன் நாகநாதன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை சென்னையில் மொத்தம் 796 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 22 -ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக வீட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகர் இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது வைகோவின் உடல்நிலை குறித்து முத்தரசன் கேட்டறிந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.